September 27, 2022

இந்தியாவில் அதன் மொத்த விற்பனை
8 லட்சத்தை தாண்டியுள்ளது ரெனோ

மும்பை, பிப்.9

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான ரெனோ நிறுவனம், இந்தியாவில், அதன் மொத்த விற்பனை 8 லட்சத்தை தாண்டி உள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து, ரெனோ இந்தியா ஆப்ரேசன்ஸ் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் மாமில்லபல்லே தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் எங்கள் விற்பனை 8 லட்சம் என்ற மைல்கல்லை கடந்ததில், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என தெரிவித்தார். மேலும், இது ஓர் அற்புதமான பயணம். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் வலுவான அடித்தளத்தை நிறுவியுள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

பிரான்ஸ் மற்றும் இந்தியா அணிகளின் வலுவான ஒத்துழைப்புடன் வாகனங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் மேக் இன் இந்தியா முயற்சியின் கீழ் தயாரிக்கப் பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, முதலில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு, அதன்பின் உலக சந்தைக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love