October 3, 2022

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதம் குறைத்து அறிவித்தது பிட்ச் ரேட்டிங்ஸ்

புது தில்லி, செப்.16

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 7 சதமாக இருக்கும் என, பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் குறைத்து அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிறுவனம், கடந்த ஜூன் மாதத்தில், நாட்டின் வளர்ச்சி 7.8 சதமாக இருக்கும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது 7 சதமாக இருக்கும் என அறிவித்துள்ளது. உலக பொருளாதார பாதிப்புகள் மற்றும் அதிகரிக்கும் பணவீக்கம், பணக் கொள்கையில் அதிக இறுக்கம் ஆகியவற்றை முன்னிட்டு, வளர்ச்சி 7 சதமாக குறையும் என, இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து, பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் மட்டுப்படுத்தப்பட்டாலும், உணவு பொருட்கள் பணவீக்கம் தொடர்கிறது. மொத்த விலை பணவீக்கம் 11 மாதங்களில் இல்லாத வகையில், 12.41 சதமாக சரிந்துள்ளது. ஆனாலும், சில்லரை விலை பணவீக்கம் 7 சதமாக சற்று அதிகரித்தே உள்ளது. மூடிஸ், எஸ்பிஐ சிட்டி குழுமம் ஆகிய நிறுவனங்களும், ஏற்கனவே வளர்ச்சிக் கணிப்பை குறைத்து அறிவித்துள்ளன. ஆர்பிஐ, நடப்பு நிதியாண்டில், வளர்ச்சி 7.2 சதமாக இருக்கும் என, தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love