December 8, 2022

இந்தியாவின் காபி ஏற்றுமதி
ரூ.3,312 கோடியாக அதிகரிப்பு

புது தில்லி, நவ.19

இந்தியாவின் காபி ஏற்றுமதி ரூ.3,312 கோடியாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 2013-14ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் காபி ஏற்றுமதி ரூ.1,657 கோடியாக இருந்தது. அது, நடப்பு நிதியாண்டின் இதே மாதங்களில் ஏறக்குறைய இரு மடங்கு உயர்ந்து ரூ.3,312 கோடியாகியுள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசியாவில் காபி உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உடனடி காபி ரகங்களைத் தவிர, ரோபஸ்டா, அரேபிகா ஆகிய காபி வகைகளையும் இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகியவை இந்திய காபியின் முக்கிய இறக்குமதி நாடுகளாகும்.

Spread the love