December 9, 2022

இந்தியன் வங்கி லாபம் ரூ.1,225 கோடியாக அதிகரிப்பு

சென்னை, நவ.7

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியின் நிகரலாபம் கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.1,225 கோடியாக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,225 கோடியாகும். முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ரூ.1,089 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிகரலாபம் 13 சதம் உயர்ந்துள்ளது.

மேலும், மதிப்பீட்டு மாதத்தில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.12,538 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகடத்திய இது ரூ.11,440.42-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கியின் வட்டி வருவாய் கடந்த ஆண்டு இதே காலாண்டில் இருந்ததைவிட 15 சதவீதம் அதிகரித்து தற்போது ரூ.4,684 கோடியாக உயா?ந்துள்ளது. மொத்த வாராக் கடனும் 9.56 சதத்திலிருந்து 7.3 சதமாக சரிந்துள்ளது என்று அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love