February 2, 2023

இண்டஸ்இண்ட் வங்கியின் நிகர லாபம் கடந்த டிசம்பர் மாதத்தில் 58 சதம் அதிகரிப்பு

மும்பை, ஜன.20

கடந்த டிசம்பர் மாதத்தில் இன்டஸ்இண்ட் வங்கியின் நிகர லாபம் 58 சதவீதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வங்கியின் நிகரலாபம் ரூ.1,964 கோடியாக இருந்தது. முந்தைய 2021ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 58 சதம் அதிகம் ஆகும். மேலும், மதிப்பீட்டு மாதத்தில் வங்கியின் நிகர வட்டி வருவாய் 18 சதம் அதிகரித்து ரூ.4,495 கோடியாக உள்ளது.

கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் வங்கியின் பிற வகை வருவாய் ரூ.2,076 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,877 கோடியாக இருந்தது. அதே போல், வங்கியின் மொத்த கட்டண வருவாயும் 11 சதம் அதிகரித்து ரூ.2,077 கோடியாக உள்ளது என்று அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love