October 3, 2022

இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் பிரிவுக்காக
புதிய தலைவரை தேடும் கவுதம் அதானி

புது தில்லி, செப்.6

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கவுதம் அதானி, தன்னுடைய குழுமத்தின் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் பிரிவுக்காக, புதிய தலைவரை தேடும் பணியை துவக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது தலைவராக இருப்பவர், விரைவில் ஒரு புதிய பதவியை ஏற்க இருப்பதால், அவரது இடத்துக்கு ஏற்ற நபரை தேடும் பணியில் நிறுவனம் களமிறங்கி உள்ளது. இது குறித்து வெளிவந்துள்ள செய்தியாவது:

அதானி குழுமத்தின் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருக்கும் வினோத் பஹெட்டி, புதிய பொறுப்பை ஏற்க இருக்கிறார். அதனால், அவரது இடத்துக்கு புதிய நபரை தேர்வு செய்யும் பணி துவங்கி உள்ளது. வினோத் புதிய வணிகப் பிரிவு ஒன்றுக்கு பொறுப்பு ஏற்க உள்ளார். அது குறித்த அறிவிப்பு பின்னர் வரும்.அனேகமாக இம்மாத இறுதிக்குள் இந்த புதிய வணிகம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம்.

மேலும், அதானி குழுமம், சமீப காலமாக பல்வேறு புதிய புதிய துறைகளில் காலடி எடுத்து வைத்து வருகிறது.இதற்காக பல நிறுவனங்களை கையகப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, மிகவும் தகுதி வாய்ந்த ஒருவரை, இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் பிரிவுக்காக நிறுவனம்தேடி வருகிறது. இவ்வாறு அவர்கள்தெரிவித்தனர்.

Spread the love