December 9, 2022

இசைக் கருவிகளின் ஏற்றுமதி ரூ.172 கோடியாக அதிகரிப்பு
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

புது தில்லி, அக்.28

இந்திய இசைக் கருவிகள் ஏற்றுமதி ரூ.172 கோடியாக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து வர்த்தகம் மற்றும் தொழிதுறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருப்பதாவது:

நாட்டின் இசைக் கருவிகள் ஏற்றுமதி, இந்த நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 3.5 சதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த 2013-14ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ.49 கோடியாக இருந்த இசைக் கருவிகளின் விற்பனை, நடப்பு நிதியாண்டின் இதே மாதங்களில் ரூ.172 கோடியாக அதிகரித்துள்ளது என்றார் அவர்.

இசைக் கருவிகளின் ஏற்றுமதி வளர்ச்சி உற்சாகமளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளதாவது: இந்திய இசையின் புகழ் உலகெங்கிலும் பரவி வருகிறது. எனவே, இந்திய இசைக் கருவிகள் ஏற்றுமதித் துறைக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Spread the love