September 27, 2022

ஆயுத பூஜைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை, செப்.22

ஆயுத பூஜையையொட்டி, பயணிகள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, 2 நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆயுதபூஜை வரும் அக்.4ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையயாட்டி, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்ட செய்தி அறிவிப்பாவது:

வருகிற 30-ஆம் தேதி, அக்.1ம் தேதி ஆகிய இரண்டு நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும். மற்ற ஊர்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 3 பேருந்து நிலையங்கள்: சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தால் சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, 3 பேருந்து நிலையங்கள் மூலமாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில், திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் நிற்கும். மேலும், பூந்தமல்லி பணிமனை அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்திலிருந்து, வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். மேற்குறிப்பிட்ட ஊர்கள் இல்லாமல், பிற ஊர்களுக்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் புறப்படும் என்றார்.

Spread the love