December 7, 2022

ஆன்லைன்’ விற்பனை 25 சதம் அதிகரிப்பு ரெட்சீர் நிறுவனம் தகவல்

புது தில்லி, நவ.19

மின்னணு வர்த்தக நிறுவனங்கள், பண்டிகை காலத்தை முன்னிட்டு, கடந்த அக்டோபரில் ரூ.76 ஆயிரம் கோடிக்கு பொருட்களை விற்பனை செய்துள்ளன, என ரெட்சீர் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

ரெட்சீர் நிறுவனம், ரூ.83 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடைபெறும் என கணித்திருந்த நிலையில், அதைவிட குறைவாகவே விற்பனை ஆகியுள்ளது.

இருப்பினும், இத்துறை 25 சத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இக்காலகட்டத்தில், ஆன்லைனில் கிட்டத்தட்ட 11.2 – 12.5 கோடி பேர் பொருட்களை வாங்கியுள்ளனர்.

Spread the love