December 8, 2022

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்காக
ரூ.37.66 கோடியில் கட்டப்பட்டுள்ள
விடுதிகள், பள்ளிக் கட்டடங்கள்
முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை, நவ.2

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, மதுரை, திருவாரூர், தென்காசி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 5 கோடியே 92 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கான 6 விடுதிக் கட்டடங்கள் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 51 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 பள்ளிக்கட்டடங்கள் மற்றும் செங்கல்பட்டு, நீலகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 17 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிக் கட்டடங்களை திறந்துவைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக- பொருளாதார நிலையினை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை கட்டுதல், வீட்டுமனைப் பட்டா வழங்குதல், குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், மானியத்துடன் கூடிய கடனுதவி, அவ்விளைஞர்களுக்கு சுயதொழில் / வேலைவாய்ப்பினை உருவக்கிட பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம் – சைதாப்பேட்டையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதுகலை கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம், மதுரை மாவட்டம் – மதுரையில் 1 கோடியே 26 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம், திருவாரூர் மாவட்டம் – எடையூரில் 1 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடம் மற்றும் கொரடாச்சேரியில் 1 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

மேலும், தென்காசி மாவட்டம் – சோலைச்சேரியில் 1 கோடியே 26 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம்; கிருஷ்ணகிரி மாவட்டம் -போஜனபள்ளியில் 3 கோடியே 35 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம், என 300 மாணவர்கள் மற்றும் 150 மாணவிகள் பயன்பெறும் வகையில் 6 இடங்களில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் விடுதிக் கட்டடங்கள்; திருவள் ளூர் மாவட்டம் – தேர்வாயில் 3 கோடியே 70 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவிலும், காஞ்சிபுரம் மாவட்டம் – மெளலிவாக்கத்தில் 3 கோடியே 44 இலட்சத்து 41 ஆயிரம் ரூபாய் செலவிலும், ஈஞ்சம்பாக்கத்தில் 1 கோடியே 74 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும், மயிலாடுதுறை மாவட்டம் – கொண்டலில் 1 கோடியே 62 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவிலும், 916 மாணவர்கள் மற்றும் 839 மாணவிகள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள 4 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கான வகுப்பறைக் கட்டடங்கள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள்; செங்கல்பட்டு மாவட்டம் – குமிழியில் 12 கோடி ரூபாய் செலவிலும், நீலகிரி மாவட்டம் – மு. பாலாடாவில் 2 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவிலும், நாமக்கல் மாவட்டம் – செங்கரையில் 2 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவிலும் ஒரு பள்ளியில் 480 மாணவர்கள் பயிலும் வகையில் கட்டப்பட்டுள்ள 3 எகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கான கட்டடங்கள்; என டமொத்தம் 37 கோடியே 66 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

மேலும், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன்பெறும் பொருட்டு அம்மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தாட்கோ அலுவலகங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கென தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினிப் பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 197 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ. அன்பரசன், அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் உ. மதிவாணன், தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு ஜவஹர், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் த.ஆனந்த், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கே.எஸ். கந்தசாமி, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Spread the love