September 27, 2022

ஆதார்-வாக்காளர் அட்டை
இதுவரை 2 கோடி பேர் இணைப்பு

சென்னை, செப்.6

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இதுவரை 2 கோடி பேர் இணைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இரட்டைப் பதிவுகள் போன்றவற்றை தடுத்து வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆதார் இணைப்புக்காக 6பி என்ற படிவத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்குச்சாவடி அளவிலான அலுவலரை அனுப்பி விவரங்கள் பெறப்படுகின்றன. மேலும், என்விஎஸ்பி இணையதளம் மூலம் ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆக. 1ம் தேதி ஆதார் இணைப்புப் பணிகள் தொடங்கிய நிலையில், இதுவரை 2 கோடி பேர், அதாவது 32 சதம் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர்.

இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, மாவட்டங்கள் தோறும் ஆதார் சிறப்பு இணைப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சில மாவட்டங்களில் 100 நாள் வேலை திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என்றார்.

Spread the love