October 3, 2022

ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம் செய்தது ஏசர்

சென்னை, செப்.17

இந்திய சந்தையில் ஏசர் ஹோம் எண்டர்டெயின்மெண்ட் பொருட்களை விற்பனை செய்யும் உரிமம் பெற்ற இண்ட்கல் டெக்னாலஜிஸ் நிறுவனம் எச் மற்றும் எஸ் சீரிஸ் ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இரு டிவிக்களும் ஆண்ட்ராய்டு டிவி 11 ஒஎஸ் கொண்டிருக்கின்றன. இத்துடன் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விசன், எம்இஎம்சி தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன. புதிய டிவி மாடல்களில் எச் சீரிஸ் 60 வாட் ஹை-பை ப்ரோ ஆடியோ சிஸ்டம், 65 இன்ச் மாடலில் 50 வாட் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவிக்களில் பிரீமியம் மெட்டல் பினிஷ், ஷெல் பாடி மற்றும் ஃபிரேம்லெஸ் டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. இவை மூன்று ஆண்டுகள் வாரண்டியுடன் வருகின்றன.

மேலும், இந்த டிவி-க்கள் நாட்டின் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள், நாடு முழுக்க சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிக விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இவை 32 இன்ச் எச்டி, 43 இன்ச் யுஎச்டி, 50 இன்ச் யுஎச்டி, 55 இன்ச் யுஎச்டி மற்றும் 65 இன்ச் யுஎச்டி டிஸ்ப்¼ளக்களை கொண்டுள்ளன. இத்துடன் ஸ்மார்ட் புளூ லைட் ரிடக்­ன், எச்டிஆர் 10+, எச்எல்ஜி சப்போர்ட், சூப்பர் பிரைட்னஸ், பிளாக் லெவல் ஆக்மெண்டேசன் என ஏராள அம்சங்களை கொண்டிருக்கிறது.

இதன் விலையை பொறுத்தவரை 32 இன்ச் டிவி ரூ. 14,999. 43 இன்ச் டிவி ரூ.29 ,999. 50 இன்ச் டிவி ரூ.34 ஆயிரமாக உள்ளது.

Spread the love