October 4, 2022

ஆண்டுக்கு 80 ஆயிரம் ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் ஆலை நிறுவ தனியாருக்கு அரசு அழைப்பு

புது தில்லி, செப்.10

ஆண்டுக்கு 80 ஆயிரம் ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் ஆலை நிறுவ, மேக் இன் இந்தியா திட்டம் வாயிலாக டெண்டர் கோரப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாவது:

அதிவேக ரயில்கள் மற்றும் சாதாரண ரயில்களுக்கு தேவையான சக்கரங்கள் தயாரிக்கும் ஆலை, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆலையில் இருந்து ஆண்டுக்கு 80 ஆயிரம் சக்கரங்கள் கொள்முதல் செய்யப்படும். மேலும், நம் நாட்டில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ரயில் சக்கரங்கள் ஏற்றுமதியும் செய்யப்படும். நமக்கு ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரயில் சக்கரங்கள் தேவைப்படுகின்றன. உள்நாட்டிலேயே அனைத்து மூலப்பொருட்களும் கிடைப்பதால், ரயில் சக்கர ஆலை அமைக்க முதன் முறையாக தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நம் நாட்டுக்கு தேவையான ரயில் சக்கரங்கள் தற்போது கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், மேற்கு ஐரோப்பிய நாடான ஜெர்மனி ஆகியவற்றில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. உக்ரைனில் தற்போது போர் நடப்பதால், நமக்கு வர வேண்டிய ரயில் சக்கரங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Spread the love