December 8, 2022

ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சை விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல், நவ.21

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு வாரம் 21.11.2022 முதல் 04.12.2022 வரை அனுசரிக்கப்படவுள்ளது. மேலும், ஆண்களுக்கான நவீன வாசக்டமி பற்றிய விழிப்புணர்வு பணிகள் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள்இ அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை எளிமையானது, பாதுகாப்பானது, பக்க விளைவுகள் ஏதும் இல்லாதது, மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை, அறுவை சிகிச்சை இல்லாமல், மயக்க மருந்து இல்லாமல், கத்தியின்றி இரத்தமின்றி ஒரு சில நிமிடங்களில் செய்யப்படும். கருத்தடை செய்து கொள்ளும் ஆண்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3,100 உடனடியாக வழங்கப்படும். இந்த சிகிச்சை முகாமில் தகுதியுள்ள ஆண்கள் கருத்தடை செய்து கொள்ளலாம்.

Spread the love