January 21, 2023

ஆக்டிவா மாடலுக்கு அசத்தல் கேஷ்பேக் ஹோண்டா நிறுவனம் அறிவிப்பு?

சென்னை, ஜன.21

ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியா நிறுவனம் தனது ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்குவோருக்கு குறுகிய கால சலுகை அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளிவந்துள்ள செய்தியாவது: இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஆக்டிவா உள்ளது. குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து சதம் கேஷ்பேக் (அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம்) வழங்கப்படுகிறது.

எனினும், இந்த கேஷ்பேக் சலுகை எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்போர் மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

அந்த வகையில் குறைந்த பட்ச பரிவர்த்தனை தொகை ரூ. 40 ஆயிரம் ஆக இருக்க வேண்டும். மற்ற பலன்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு குறைந்த முன்பணம் ரூ. 3 ஆயிரம், 7.99 சதவீதம் வட்டியில் கிடைக்கிறது. இந்த சலுகை மார்ச் 31, 2022 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் இரண்டு சலுகைகளை ஒரே சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியாது. சலுகை தவிர ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா மாடலின் புது வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இது பற்றி ஹோண்டா நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

Spread the love