October 4, 2022

ஆக்சோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்
ஹாப் நிறுவனம் அறிமுகம் செய்தது

மும்பை, செப்.6

ஹாப் எலெக்ட்ரிக் நிறுவனம் ஆக்சோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹாப் ஆக்சோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த எலெக்ட்ரிக் பைக் ஸ்டாண்டர்டு மற்றும் எக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இரண்டு வேரியண்ட்களிலும் ஐபி 67 தர சான்று, 3.75 கிலோவாட் பேட்டரி, மல்டி மோட் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங், 4ஜி கனெக்டிவிட்டி, பிரத்யேக மொபைல் செயலி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் செயலியில் ஸ்பீடு கண்ட்ரோல், ஜியோ பென்சிங், ஆண்டி தெப்ட் சிஸ்டம் மற்றும் ரைடு விவரங்களை பார்க்க முடியும். இதன் பேஸ் வேரியண்ட்- இகோ, பவர் மற்றும் ஸ்போர்ட் மூன்று ரைடு மோட்களை கொண்டிருக்கிறது.

ஹாப் ஆக்சோ எக்ஸ் வேரியண்டில் கூடுதலாக டர்போ மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 90 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை பயணிக்க முடியும். இந்த பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய நான்கு மணி நேரம் ஆகும். அறிமுக நிகழ்வுக்கு முன்பாகவே இந்த மோட்டார்சைக்கிளை வாங்க சுமார் 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருப்பதாக ஹாப் எலெக்ட்ரிக் நிறுவனர், தலைமை செயல் அதிகாரி கேத்தன் மேத்தா தெரிவித்துள்ளார். புதிய ஹாப் ஆக்சோ விற்பனை அந்நிறுவனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் செண்டர் மற்றும் வலைதளத்தில் நடைபெறுகிறது.

Spread the love