October 3, 2022

ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 7 சதமாக அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்

புது தில்லி, செப்.13

நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் சில்லரை பண வீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 7 சதமாக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, தொடர்ந்து 8-வது மாதமாக இப்பணவீக்கம் ஆர்பிஐயின் நிர்ணய வரம்பான 6 சதத்துக்கும் அதிகமாகவே உள்ளது கவனிக்கத்தக்கது. உணவுப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாகவே சில்லரை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், சில்லரைப் பணவீக்கம் நடப்பாண்டு ஜூலையில் 6.71 சதமாகவும், கடந்த 2021 ஆகஸ்டில் 5.3 சதமாகவும் காணப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருள் தொகுப்புக்கான பணவீக்கம் 7.62 சதமாக அதிகரித்தது. இது, முந்தைய ஜூலையில் 6.69 சதமாகவும், கடந்தாண்டு ஆகஸ்டில் 3.11 சதமாகவும் இருந்தது.

Spread the love