October 3, 2022

ஆகஸ்டில் ராய்ல என்பீல்ட் ஹண்டர் 350 18 ஆயிரம் யூனிட்கள் விற்பனை

சென்னை, செப்.16

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 பைக்கிற்கு இந்திய சந்தையில் மிக அமோகமான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2022 ஆகஸ்டு மாதத்திலேயே அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படு

கடந்த 2022 ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 18,197 யூனிட்டுகள் விற்பனையாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மிக சூப்பரான டிமாண்ட் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், புல்லட் 350-ஐக் காட்டிலும் மிக குறைவான விலைக் கொண்ட ராயல் என்பீல்டு பைக்காகவும் இது காட்சியளிக்கின்றது. இதுபோன்று காரணங்களினாலேயே ஹண்டர் 350 பைக்கிற்கு நல்ல வரவேற்பு சந்தையில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ.1.50 லட்சம் ஆகும். அதேவேலையில், இதன் உயர்நிலை தேர்வு ரூ. 1.69 லட்சம் என்கிற விலையில் விற்கப்படுகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த இருசக்கர வாகனத்தை ராயல் என்பீல்டு நிறுவனம் ஜே பிளாட்பாரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியிருக்கின்றது.

ராயல் என்பீல்டு நிறுவனம் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி ஃபூயவல் இன்ஜெக்டட் ஏர் மற்றும் ஆயில் கூல்டு மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 20 எச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மி­ன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்களும் இருசக்கர வாகனத்தின் பக்கம் மக்கள் குவிய காரணமாக இருக்கின்றது. இதன் விற்பனை நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகன மாடலான கிளாசிக் 350-இன் விற்பனையையே மிஞ்சும் அளவிற்கு உள்ளது. ஆகையால், அடுத்து வரும் நாட்களில் கிளாசிக் 350-ஐயே மிஞ்சுவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Spread the love