October 3, 2022

ஆகஸ்டில் நாட்டின் சில்லரை பணவீக்கம் 6.9 சதம் இருக்கும்: டாய்ச்ச வங்கி கணிப்பு

புது தில்லி, செப்.6

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 6.9 சதவீதமாக இருக்கும் என டாய்ச்ச வங்கி கணித்து அறிவித்துள்ளது, ‘

இது குறித்து விரிவான செய்தியாவது: ஆகஸ்ட் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த தரவுகள், அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், டாய்ச்ச வங்கி தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் தெரிவித்துள்ளதாவது:கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரங்களில் நல்ல சரிவை கண்டிருந்தாலும், அது சில்லரை விலை பணவீக்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

மேலும், இந்த மதிப்பீட்டு காலத்தில், முக்கியமான காய்கறிகள் விலை உயர்ந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற காரணங்களால், சில்லரை விலை பணவீக்கம், ஆகஸ்டில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வட்டி விகிதத்தை பொறுத்தவரை, ஆர்பிஐ நடப்பு நிதியாண்டில், கூடுதலாக 75ல் 85 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வட்டியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளது.

Spread the love