February 2, 2023

அலாய் வீல்களில் புளோ ஃபார்ம் தொழில்நுட்பம் வீல்ஸ் இந்தியா நிறுவனம் அறிமுகம்

சென்னை, ஜன.20

தாங்கள் உற்பத்தி செய்யும் அலாய் வீல்களில் “ஃபுளோ ஃபார்ம்’ எனப்படும் புதிய தொழில்நுட்பத்தை வீல்ஸ் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து, சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஃபுளோஃபார்ம் எனப்படும் புதிய தொழில்நுட்பத்தை எங்களது அலாய் வீல்களில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

மேலும், அந்தத் தொழில்நுட்பத்துடன் கூடிய எங்களது அலாய் வீல்கள் சமீபத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. விரைவில் இந்தியச் சந்தையிலும் அவை அறிமுகப்படுத்தப்படும். எடை குறைவான, அதிக உறுதி கொண்ட ஃபுளோ ஃபார்ம் அலாய் வீல்கள், நீடித்து உழைப்பதுடன் கார்களுக்கு அதிக எரிபொருள் சிக்கனத்தையும் அளிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love