January 22, 2023

அரசுத்துறை வணிகம் கையாள முகவர் வங்கியாக
டிஎம்பி வங்கிக்கு ஆர்பிஐ அங்கீகாரம் வழங்கியது

சென்னை, டிச.2

அரசுத்துறை சார்ந்த வணிக நடவடிக்கைகளை கையாளுவதற்கான முகவர் வங்கியாக டிஎம்பி வங்கிக்கு ஆர்பிஐ அங்கீகாரம் அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (டிஎம்பி) பெயர் பெற்ற பழைய தனியார் துறை வங்கியாகும்.

இந்த வங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருகிறது. தொடர்ந்து இவ்வங்கி நல்ல லாபம் ஈட்டு வருகிறது. இந்த வங்கி நாடு முழுவதும் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 509 கிளைகள், 12 மண்டல அலுவலகங்களின் மூலம் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையாற்றி வருகிறது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. வங்கி தனது தொலைநோக்கு திட்டமாக நாடுமுழுவதும் மீண்டும் விரிவாக்க நடவடிக்கைகளிலும் அதன் சேவை திட்டங்களிலும் புதிய பரிமாணங்களை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஆர்பிஐ தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியை அரசுத்துறை சார்ந்த வணிக நடவடிக்கைகளை கையாளுவதற்கான முகவர் வங்கியாக அங்கீகாரம் அளித்துள்ளது. மேலும், இதனை வங்கியின் அனைத்து நிலை உடமைதாரர்களுக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக வங்கியின் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Spread the love