February 3, 2023

அயோத்தி காசிக்கு விமான சுற்றுலா: ஐஆர்சிடிசி தகவல்

சென்னை, நவ.24

ஐஆர்சிடிசி என்ற இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், சென்னையில் இருந்து அயோத்தி, காசி, கயாவுக்கு விமான சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: சென்னையில் இருந்து டிச.18ல் புறப்படும் வகையிலான ஐந்து நாள் விமான சுற்றுலாவில், ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர், புரி, கோனார்க், ஜெகன்னாதர் கோவில்கள் மற்றும் சில்கா ஏரியை காணலாம். ஒருவருக்கு, ரூ.34,500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து, அடுத்த ஆண்டு ஜன.16ல் புறப்படும் வகையிலான ஏழு நாள் சுற்றுலாவில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி, காசி, அலகாபாத்; பீஹார் மாநிலம் கயாவுக்கு செல்லலாம். ஒருவருக்கு, 39,500 ரூபாய் கட்டணம். மேலும் விபரங்களுக்கு, 90031 40682, 82879 31977 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Spread the love