December 8, 2022

அன்னிய செலாவணி கையிருப்பு சரிவு – ஆர்பிஐ புள்ளிவிவரம் தகவல்

மும்பை, அக்.29

நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 14ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஆர்பிஐ தெரிவித்துள்ளதாவது:

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்தியா, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவை சமாளிக்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில் நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது.

அன்னியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 3.85 பில்லியன் டாலர்கள் குறைந்து 524.52 பில்லியன் டாலராக உள்ளது என்று ஆர்பிஐ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேபோல் ஸ்பாட் அன்னிய செலாவணி கையிருப்பு அளவு மார்ச் இறுதியில் 607 பில்லியன் டாலரில் இருந்து வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் 3 இல் காணப்பட்ட அதிகபட்சமான $642.45 பில்லியனில் இருந்து தற்போது 117.93 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் இறக்குமதிக்கு போதுமான அன்னிய செலாவணி கையிருப்பு 12 வாரங்களில் 11 வாரங்களுக்கு குறைந்து துள்ளது.அதாவது இந்திய சந்தைக்கு இனி புதிய முதலீடுகள் வரவில்லை எனில் 11 வாரங்கள் இறக்குமதிக்கு மட்டுமே போதுமான அன்னிய செலாவணி கையிருப்பு உள்ளது.

இந் நிலையில் அன்னியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 528.37 பில்லியன் டாலராக குறைந்துள்ளது ஜூலை 2020-க்கு பின்பு மோசமான நிலையை எட்டியுள்ளது. ஆர்பிஐ வெளியிடப்பட்ட வாராந்திர அறிக்கையின் படி அன்னிய செலாவணி கையிருப்பு சரிவுக்கு, அன்னிய செலாவணி சொத்துக்களின் வீழ்ச்சி முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது

அக்டோபர் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வெளிநாட்டு நாணய சொத்துக்கள் 3.59 பில்லியன் டாலர் குறைந்து 465.08 பில்லியன் டாலராக உள்ளது. மேலும், தங்கம் கையிருப்பு 247 மில்லியன் டாலர் குறைந்து 37.21 பில்லியன் டாலராக உள்ளது. இவ்வாறு ஆர்பிஐ வெளியிட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love