October 4, 2022

அனைத்து மெட்ரோ ரயில் பாதை பணிகளுக்கு ரூ.340.63 கோடியில் கட்டுமான ஒப்பந்தம்

சென்னை, செப்.14

அனைத்து மெட்ரோ ரயில் பாதைப் பணிகளுக்கான கட்டுமான ஒப்பந்தம் ரூ.340.63 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ல் வழித்தடங்கள் 3 மற்றும் 5க்கான பாதை பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்று மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ல் வழித்தடம் 5ல் சிஎம்பிடி முதல் சோழிங்நல்லூர் வரை மற்றும் வழித்தடம் 3ல் சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரையிலான உயர்மட்ட பிரிவில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் பாதைப் பணிகளுக்கான கட்டுமான ஒப்பந்தம் எல்&டி நிறுவனத்திற்கு ரூ.340.63 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2ல் வழித்தடங்கள் 3 மற்றும் 5ல் 35 மெட்ரோ ரயில் நிலைய இருப்பு பாதைகளில் தண்டவாளங்கள் அமைப்பது மற்றும் அதன் தொடர்பான அனைத்து வகையான பணிகளும் இதில் அடங்கும். மேலும், இந்த ஒப்பந்தம் கையயழுத்திடும் நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் அசோக்குமார், லிவிங்ஸ்டோன், ரேகா பிரகாஷ், கூடுதல் பொது மேலாளர் குருநாத் ரெட்டி மற்றும் எல்&டி நிறுவனத்தின் துணைத் தலைவர், வணிக தலைவர் சுனில் கட்டார் மற்றும் திட்ட மேலாளர் ஆனந்த் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Spread the love