November 29, 2022

அதிகரிக்கும் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கோகோரோ நிறுவனம் களமிறங்க திட்டம்

பெங்களூரு, நவ.1

ஓலா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் கொடிகட்டிப் பறந்து வரும் நிலையில் தற்போது அதற்குப் போட்டியாகத் தைவான் நாட்டைச் சேர்ந்த கோகோரோ நிறுவனம் இந்தியாவிற்குள் களம் இறங்கத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

கோகோரோ நிறுவனம் வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி முதல் இந்தியாவிற்குள் தனது ஸ்கூட்டரைவிற்பனைக்கு அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் சந்தையில் இருக்கும், ஓலா, ஒகினாவா, ஏத்தர் ஆகிய நிறுவனங்களுக்குப் போட்டியாகக் களம் இறங்குகிறது.

இதுவரை இந்நிறுவனம் இந்தியாவில் தனது தனது எந்த தயாரிப்பை வெளியிடப்போகிறது என்ற தகவலை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் தனது ஒரு ஸ்கூட்டரை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கும், மற்றொரு ஸ்கூட்டரை தொழிற்பயன்பாட்டிற்கும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரடியாக வாடிக்கையாளர்களுக்குத் தனது எஸ்1 ஸ்கூட்டரையும், தொழிற்பயன்பாட்டிற்கு விவா ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்1 ஸ்கூட்டரை பொருத்தவரை மிட்-மவுண்ட் சிங்கிள் மோட்டார் செட்டப் கொண்டது. இந்த ஸ்கூட்டர் 9.6 பிஎச்பி பவரையும் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டரில் ஸ்வாப் செய்யக்கூடிய லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 150 கி.மீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 30 கி.மீ வேகத்தில் தான் செல்லும், இதற்கு அதிகமான சார்ஜிங் ஆப்­ன்கள் உள்ளன.

இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமாகும் போது ரூ1.5 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். அடுத்ததாக விவா ஸ்கூட்டரை பொருத்தவரை 4 பிஎச்பி மோட்டாரை கொண்டது. இது 85 என்எம் டார்க் திறனை மேம்படுத்தும், இது முழு சார்ஜில் 85 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரின் சஸ்பென்சன்னை பொருத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க், பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சர்பர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ.80,000 என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love