October 3, 2022

அண்ணா பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட
சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

மதுரை, செப்.19

அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடத்தப்பட்ட சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் பரிசு தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 114-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாகஇ மதுரை டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கில் 14.09.2022-அன்று நடைபெற்றது. இப்போட்டிகளை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்போட்டி 13,15,17 வயதிற்குட்பட்ட மாணவர்கள்இ மாணவியர்கள் என இருபாலருக்கும் தனித் தனியே நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு முதல்பரிசாக ரூ.5000/-ம் இரண்டாம் பரிசாக ரூ.3000/-ம் மூன்றாம் பரிசாக ரூ.2000/-ம் 4 முதல் 10ம் வரை இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.250ஃ- பரிசுத்தொகை என காசோலையாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியரா ல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது, மதுரை மண்டல முதுநிலை மேலாளர் ஜா.பியூலா ஜேன் சுசிலா, மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கே.ராஜா உட்பட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பயிற்றுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Spread the love