October 3, 2022

அடுத்த 5-6 ஆண்டுகளில் 10 ஆயிரம்
ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்க அரசு திட்டம்

புது தில்லி, செப்.1

அடுத்த 5-6 ஆண்டுகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலர் அல்கேஷ் குமார் சர்மா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமும் நிதியை தேடி ஓடவில்லை என்றும்; அவை, வளர்ச்சி வாய்ப்பை தேடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நிதி ஒரு பிரச்னை இல்லை. நாம் இப்போது, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறோம். அடுத்த 5 – 6 ஆண்டுகளில், பத்தாயிரத்துக்கும் அதிகமான ஸ்டார்ட் அப்களை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.

கடந்த ஜூலை மாதத்தில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதற்காக, ஜெனிசிஸ் எனும் ரூ.750 கோடி மதிப்பிலான திட்டத்தை, அரசு அறிமுகம் செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் தற்போது, கிட்டத்தட்ட 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ரூ.8,000 கோடிக்கும் அதிகமான சந்தை மதிப்பு கொண்ட யுனிகார்ன் நிறுவனங்கள் எண்ணிக்கை 100க்கும் மேல் உள்ளது.

Spread the love