புது தில்லி, டிச.9
நடப்பாண்டு 2022 நவம்பர் மாதம் வரை 4,766 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 2022-23 ஆம் நிதியாண்டில் 12,200 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. நாட்டில் நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவிரைவுச் சாலை அமைப்பதற்கு இடையே 35 பன்னோக்கு மாதிரி சரக்குப்போக்குவரத்து பூங்காக்கள் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம், நாட்டின் சரக்குப் போக்குவரத்து திறன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரத்மாலா பரியோஜனாத் திட்டத்தின் கீழ், மஹாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் வாரியாக, கட்டப்பட்டு வரும் 35 பன்னோக்கு மாதிரி சரக்குப்போக்குவரத்து பூங்காக்களின் பட்டியல் அட்டவணை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.