October 3, 2022

அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஹோண்டாவின்
முதல் எலெக்ட்ரிக் 2 வீலர் அறிமுகம்

சென்னை, செப்.17

ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் எப்போது அறிமுகமாகும் இது எந்த மாடலாக இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து விரிவான செய்தியாவது: ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் முதன்மை மாடலாக எலெக்ட்ரிக் மொபெட் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த மாடல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகமாகும் என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவன தலைவர், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அடுசி´ ஒகடா தெரிவித்தார்.

எலெக்ட்ரிக் பைக், எலெக்ட்ரிக் மொபெட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் என மூன்று பிரிவுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்த ஹோண்டா முடிவு செய்து இருக்கிறது. மூன்று பிரிவுகளிலும் அதிக வேகம் தான் வித்தியாசமாக இருக்கும். எலெக்ட்ரிக் மொபெட் மாடல் மணிக்கு அதிகபட்சம் 50 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும். இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் எலெக்ட்ரிக் மொபெட் தான் என்றும் அடுசி´ ஒகடா தெரிவித்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து அதிவேகமாக செல்லும் எலெக்ட்ரிக் வாகனம் அறிமுகம் செய்யப்படும் என்றார்.

Spread the love