October 3, 2022

அடுத்த ஆண்டுக்குள் தனது உற்பத்தித் திறன்
10 சதம் மேல் அதிகரிக்கப்படும்: பிரிட்ஜ்ஸ்டோன்

சென்னை, செப்.20

ஜப்பானிய டயர் தயாரிப்பு நிறுவனமான பிரிட்ஜ்ஸ்டோன், அடுத்த ஆண்டுக்குள் தனது உற்பத்தித் திறன் 10 சதத்திற்கு மேல் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் பராக் சட்புடே தெரிவித்துள்ளதாவது: ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் பயன்படுத்துவதற்காக வெளியிலிருந்து தருவிக்கும் உதிரிபாகங்களுக்கான சந்தை (ஓஇஎம்), சில்லறை விற்பனை சந்தை ஆகிய இரு பிரிவுகளிலும் டயர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, அடுத்த ஆண்டுக்குள் எங்களது உற்பத்தித் திறன் 10 சதம் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

இது தவிர, மின்சார வாகனங்களுக்கான டயர்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்த பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மின்சார வாகனங்களை பயன்படுத்த வாடிக்கையாளர்களை மத்திய அரசு ஊக்குவிக்கும்போது, அதனால் ஏற்படக்கூடிய அனுகூலங்களை பெறும் நோக்கில் இந்த வகை டயர்களை இந்தியச் சந்தையில் பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகப்படுத்தவிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

Spread the love