February 3, 2023

அசோக் லேலண்ட் விற்பனை 39 சதம் அதிகரிப்பு

சென்னை, டிச.2

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் வர்த்தக வாகன மொத்த விற்பனை கடந்த மாதம் 39 சதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பர் மாதத்தில் நிறுவனத்தின் 14,561 வர்த்தக வாகனங்கள் விற்பனையாகின. 2021ம் ஆண்டின் இதே மாதத்தில் நிறுவன வர்த்தக வாகனங்களின் மொத்த விற்பனை 10,480-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இந்த முறை விற்பனை 39 சதம் வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், உள்நாட்டுச் சந்தையில் கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் 9,364-ஆக இருந்த வர்த்தக வாகனங்களின் மொத்த விற்பனை, இந்த ஆண்டு நவம்பரில் 46 சதவீதம் அதிகரித்து 13,654-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love