October 3, 2022

அக்.6ல் பிக்சல் 7 சீரிஸ்: கூகுள் அறிமுகம்

மும்பை, செப்.6

கூகுள் நிறுவனம் பிக்சல் ஹார்டுவேர் நிகழ்வு அக்டோபர் 6ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த நிகழ்வு “மேட் பை கூகுள்” எனும் தலைப்பில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் வாட்ச் போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

புதிய டீசரில் பிக்சல் 7 சீரிஸ் சாதனங்கள், அடுத்த தலைமுறை டென்சார் பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போன்களில் கேமரா பார் இடம்பெற்று இருக்கிறது. எனினும், இவை பிக்சல் 6 சீரிசில் இருந்ததை விட அளவில் சிறியதாக வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் மேட் பினிஷ் கொண்ட அலுமினியம் பிரேம், பிக்சல் 7 ப்ரோ மாடலில் பாலிஷ் செய்யப்பட்ட அலுமினியம் பிரேம் வழங்கப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 7 மாடலில் 2400×1080 பிக்சல் 90ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளேவும், பிக்சல் 7 ப்ரோ மாடலில் 3120×1440 பிக்சல் 120ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளேவும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பிக்சல் 7 மாடலில் இரண்டு கேமராக்களும், பிக்சல் 7 ப்ரோ மாடலில் மூன்று கேமரா சென்சார்களும் வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 4கே வீடியோ ரெக்கார்டிங் வசதி வழங்கப்படுகிறது.

Spread the love