December 9, 2022

அக்டோபரில் சேவைகள் துறை மீட்சி கண்டது – எஸ் அண்டு பி குளோபல் ஆய்வறிக்கை

புது தில்லி, நவ.4

நாட்டின், சேவைகள் துறையின் வளர்ச்சி, அக்டோபரில் மீட்சியை கண்டுள்ளது என, எஸ் அண்டு பி கு¼ளாபல் இந்தியா நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அக்டோபரில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘எஸ் அண்டு பி குளோபல் இந்தியா எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 55.1 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பரில் வளர்ச்சி 54.3 புள்ளிகளாக குறைந்து இருந்தது.

இது கடந்த ஆறு மாதங்களில் இல்லாத குறைவான வளர்ச்சியாகும். இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.

மேலும், புதிய வேலைகள் கிடைப்பதில், நிறுவனங்களுக்கு அக்டோபரில் பெரிய சவால்கள் எதுவும் இல்லை என்பதை இது உணர்த்துவதாக உள்ளது. தேவைகள் அதிகரித்ததை அடுத்து, வணிகச் செயல்பாடுகளும், வேலைவாய்ப்பும் மதிப்பீட்டு மாதத்தில் அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love