September 27, 2022

அக்டோபரில் அறிமுகமாகும்
புதிய பிஎம்டபிள்யூ எம்2 கார்

மும்பை, செப்.8

பிஎம்டபிள்யூ நிறுவனம் அடுத்த தலைமுறை எம்2 மாடலை அக்டோபர் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஜி87 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு இருக்கும் சிறய எம் கார் இரண்டவாது தலைமுறை மாடல் ஆகும். புதிய எம்2 மாடலில் எஸ் 58 என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 450 எச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து அறிமுகமாகும் சிஎஸ்/சிஎஸ்எல் மற்றும் காம்படிசன் வெர்சன்கள் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என தெரிகிறது. இந்த காரில் பெரும்பாலும் ரியர் வீல் செட்டப் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிசன் வழங்கப்படுகிறது. இதே காரின் மேனுவல் டிரான்ஸ்மிசன் மற்றும் எக்ஸ்-டிரைவ் ஏடபிள்யுடி வெர்சனும் அறிமுகம் செய்யப்படலாம்.

தோற்றத்தில் புதிய எம்2 அதன் வழக்கமான மாடலை போன்றே காட்சியளிக்கும். 2 சீரிஸ் கூப் மாடலை தழுவி உருவாகி இருக்கும் நிலையில், பெரிய ஏர் இண்டேக், குவாட் எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் பெரிய அலாய் வீல்கள், க்ரிப் டயர்கள், ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் வழங்கப்பட இருக்கிறது. இதன் கோ-ஃபாஸ்ட் வெர்சனில் லிப் ஸ்பாயிலர் வழங்கப்பட இருக்கிறது. உள்புறம் ஐடிரைவ் 8 வழங்கப்படுகிறது. இது எலெக்ட்ரிக் திறன் இல்லாத கடைசி எம் கார் மாடல் ஆகும். புதிய தலைமுறை M2 மாடலை தழுவி பாரம்பரிய பிஎம்டபிள்யூ 3.0 சிஎஸ்எல் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Spread the love