January 21, 2023

ஃபால்கன் ஸ்மார்ட்வாட்ச்
இந்தியாவில் அறிமுகம் செய்தது அமேஸ்ஃபிட்

மும்பை, டிச.2

அமேஸ்ஃபிட் நிறுவனம் கடந்த மாதம் அறிமுகம் செய்த ஃபால்கன் ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இது அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் முதல் பிரீமியம் மல்டி-ஸ்போர்ட் ஜிபிஎஸ் வாட்ச் ஆகும். இதில் ஏர்கிராஃப்ட் கிரேடு டிசி4 அலுமினியம் யுனிபாடி, சஃபையர் க்ரிஸ்டல் கிலாஸ் ஸ்கிரீன், 20 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, டூயல் பேண்ட் ஜிபிஎஸ் டிராக்கிங், ஆறு செயற்கைக்கோள் பொசிசனிங் சிஸ்டம்களுக்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இதில் உள்ள செப் கோச் ஸ்மார்ட் கோச்சிங் அல்காரிதம் ஒவ்வொருத்தரின் உடல்நிலை, உடற்பயிற்சி அனுபவம் உள்ளிட்டவைகளுக்கு ஏற்ப பயிற்சி வழங்கும் திறன் கொண்டுள்ளது. இதன் மூலம் பயனர் தங்களின் ஸ்போர்ட் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். செப் கோச் பயனர் அதிக சோர்வு அடைவது கண்டறிந்து அதற்கு ஏற்ப உடற்பயிற்சியின் தீவிரத்தை மாற்றும் திறன் கொண்டிருக்கிறது.

மேலும், இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் 150-க்கும் அதிக பில்ட்-இன் ஸ்போர்ட்ஸ் மோட்கள், இன்-பில்ட் ஸ்டோரேஜ், மியூசிக் வசதி உள்ளது. இதை ப்ளூடூத் ஹெட்போனுடன் கனெக்ட் செய்து பாடல்களை கேட்கலாம். இதில் பதிவாகும் உடற்பயிற்சி விவரங்களை ஸ்டார்வா, ஆப்பிள் யஹல்த், கூகுள் ஃபிட், ரிலிவ் மற்றும் அடிடாஸ் ரன்னிங் ஆப் உள்ளிட்டவைகளுடன் சின்க் செய்து கொள்ளலாம்.

Spread the love